சிதையாநெஞ்சுகொள்
சில நேரங்களில் பல இன்னல்களை நாம் சந்திக்க வேண்டியதிருக்கும், அப்போதெல்லாம் தான் நமது உண்மையான உள்முகம் நமக்கே தெரிய வரும். நாம் எடுக்கும் முடிவுகள், செயல்படும் தன்மை நம்மையே ஆச்சரியப்படுத்தி இத்தனை நாளாய் எங்கிருந்தாய் என்று கேட்க தூண்டும்!
துன்பமற்ற யாரும் இங்கே இல்லை, மாறாக சிலர் காட்டிக்கொள்கிறார்கள், சிலர் காட்டிக்கொள்வதில்லை என்பதே உண்மை. ஒரு நொடி நம்பிக்கை குறையும் போதுதான் இதயத்தில் கவலை, கலக்கம் குடி கொண்டு நோய்களை உருவாக்கும். கொஞ்சம் தள்ளிப்போடலாம், இல்லையேல் எதிர்த்து போராடலாம். மொத்தத்தில் பொறுமை மிக மிக அவசியம். நாளை உலகையே ஆளும் சக்தியே இன்றைய நம்பிக்கையில் தான் சாத்தியம். தைரியமாக இருங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக