சனி, 30 ஏப்ரல், 2022

எங்கே செல்கிறோம்?

நாம் பள்ளி சென்ற காலத்தில் அதிக அளவில் தொலைக்காட்சி காட்சிகள் கூட பார்த்தது இல்லை... வாரத்தில் வெள்ளிக்கிழமை ஒலியும் ஒளியும் மட்டும் தான் ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி. அதிலும் பெரிய கூட்டமாக அனைவரும் அமர்ந்து பார்க்கும் போது சில பாடல்கள் வரும் போது வீட்டில் தொலைக்காட்சி சில நிமிடங்கள் அணைத்து விடுவார்கள். அதுவரை முறுக்கு...எல்லுருண்டை இந்த மாதிரி ஐந்தாறு நிமிடங்கள் கழியும்! பிறகு மீண்டும் பெரியவர்கள் போட்டு விடுவார்கள்..கண்டு இரசித்தோம். பொதுவான பொழுதுபோக்கே...புத்தக வாசிப்பு... நூலகம் சென்று வருதல்... வயல் வெளிகள் சென்று....மர நிழலில் ஊஞ்சலாடுதல்... இவ்வாறு இருந்ததால் நாம் ஓரளவு... இந்த மாயை துன்பத்தில் இருந்து தப்பித்து இன்று வாழ்க்கை நடத்துகிறோம்!

இப்போது பள்ளி மாணவர்கள்... சம்பந்தப்பட்ட செய்திகள் காணும் போது.... கண்ணீர் பெருகுகிறது! ஏன் பிள்ளைகளுக்கு இத்தனை உணர்ச்சி நிலை? ஏன் இத்தனை வன்மம்? இத்தனை கோவம்??? எத்தனை நன்றாக படித்தால் கூட நாம் அடி வாங்கி இருக்கிறோமே? ஒரு பயமும்...கண்டிப்பும் கொஞ்சம் தேவைதானே?  

மேற்கத்திய முறையில் நாம் பிள்ளைகளை வளர்த்தல் இங்கே சாத்தியம் இல்லை... நாம் வாழும் இடத்திற்கேற்ப முறைமைகளோடு வளர்க்க வேண்டும். ஓரளவு சம்பாத்தியம் போதாதா? பெற்றோர் கொஞ்சம் பணம் பணம் என்று ஓடுவதை தவிர்த்து... பிள்ளைகளுக்கு சொத்து சேர்ப்பதை நிறுத்தி அவர்களுக்கு பண்பை சேர்க்க பழக வேண்டும்....

எப்படியோ ஆரம்பித்த சில சின்ன தவறுகள் இன்று வளர்ந்து நம் சமுதாயம் எங்கே செல்கிறது என்ற அச்சத்தை மனதில் வேறூன்றுகிறது!  

இனி பிள்ளைகளுக்கு மறைக்கப்பட்ட விஷயம் என்று ஏதேனும் இருக்குமா? இங்கே........ இந்த மாதிரி சுதந்திரத்தையா .. பெரியவர்கள் கனவு கண்டார்கள்!!!!!!!

நல்ல மாற்றங்கள் வேண்டும் என்று மனதார எண்ணுவதை தவிர... வேறு எதுவும் செய்ய இயலாது நாம்! 

உள்ளே உதித்ததை விதைக்கிறேன்........
அக்கறையுடன் வி.சாந்தி

செவ்வாய், 26 ஏப்ரல், 2022

வாழ்க்கை வாழ்வதற்கே

வாழ்ந்து முடித்தேன் என்பவர்கள்
வாழத்துடிக்கிறேன் என்பவர்கள்
வாழ்ந்து காட்டுகிறேன் என்பவர்கள்

இவர்களை சுமந்தவண்ணம்
பூமி சுற்றிப்பார்க்கிறது.....

வாழந்து கொண்டிருக்கிறேன்
என்று யாரேனும் இருக்கிறார்களா? என்று!

ஞாயிறு, 10 ஏப்ரல், 2022

வெற்றி

சிறிய இடத்தில் இருக்கும் போதும்
பெரிய மனதோடு நடந்துகொள்ளுங்கள்

அதுவே பெரிய இடத்திற்கு
செல்லும் பாதையாகும்!


வி.சாந்தி

தன்மை

வெள்ளி, 8 ஏப்ரல், 2022

அன்பெனும் பண்பு

நேற்று முதல் இராமு மிகவும் பிஸியாக இருக்கிறார். அலுவலகத்தில் புதிய நபரை வேலைக்கு சேர்க்க வேண்டும். அவருக்கேற்ற ஒரு பி.ஏ வை பணியில் அமர்த்த வேண்டிய கட்டாயம. இதற்காக அவர் தேடுவது நல்ல பண்புகள் மிக்க மனிதரைத் தான்!

நேரம் காலை 10-30 ., சுறுசுறுப்புடன் அலுவலகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. பத்து நபர்கள் பி.ஏ பணிக்காக காத்திருக்கிறார்கள்., அதில் "மோகனும்" ஒருவர்.

"உள்ளேயிருந்து அழைப்புக் குரல் எப்போது வரும்?"....என்று, அனைவரும் அலுவலக அறையையே பார்த்துக் கொண்டு இருந்தனர்.

ப்யூன் தேநீருடன் வருகிறார்.., அந்த பத்து பேருக்கும், வரிசையாக கொடுத்துக்கொண்டே வருகிறார். திடீரென ஏதோ ஒரு மாதிரி தலைசுற்றல் மாதிரி ஆகி... கையில் இருந்த தேநீரை அங்கு அமர்ந்திருந்தவர்கள் மேலே கொட்டி விடுகிறார் ! 

அவர்களில், ஐந்து நபர்கள்..தன் சட்டையை பார்த்து விட்டு 'கோபமாக' எழுகின்றனர்.!
நான்கு நபர்கள் "ஐயோ"! இப்படி ஆகிவிட்டதே...என்று கவலைப்பட்டு சோர்வடைகின்றனர்.

மோகன் மட்டும், உடையைப் பற்றியோ..பணியைப்பற்றியோ..
யோசிக்காமல்..அவரைத்தாங்கிப் பிடித்து..'ஐயா என்ன ஆச்சு'? என்கிறார்..அன்புடன். 

உடனே ப்யூன் , தெளிந்த நிலையில் கம்பீரமாக நின்று கொண்டு.."யூ ஆர் செலக்டட்" என்று கைகொடுக்கிறார்!!

வி.சாந்தி

வெற்றியாளரின் அடையாளங்கள்

நேற்றின் மீது மரியாதை
நாளை மீது நம்பிக்கை
இன்றைய நாளில் விடாமுயற்சி

-
வெற்றியாளரின் அடையாளங்கள்

வி.சாந்தி

எங்கே செல்கிறோம்?

நாம் பள்ளி சென்ற காலத்தில் அதிக அளவில் தொலைக்காட்சி காட்சிகள் கூட பார்த்தது இல்லை... வாரத்தில் வெள்ளிக்கிழமை ஒலியும் ஒளியும் மட்டும் தான் ஒர...