புதன், 16 மே, 2018

சுய தொழில் முன்னேற்ற குறிப்புகள்

"நான் செக்குமாட்டு வாழ்க்கை வாழப்போவதில்லை"! என்று சொல்லிக்கொள்ளுங்கள்! 'இப்படியே இருக்கப்போவதில்லை' என்று தீர்மானியுங்கள். அப்படியே ஆவீர்கள்.
எதையும் சமாளிக்கும் இயல்பை என்னுள் வைத்துத்தான் ஆண்டவன் படைத்திருக்கிறான்."என்னால் எதையும் சமாளிக்க முடியும்" என்று நம்புங்கள், சமாளியுங்கள், பயப்படாதீர்கள், இறங்குங்கள்.
சவால்களை எதிர்கொள்ள தயங்காதீர்கள். தொழிலதிபர் - வியாபாரி - எடுக்கும் கஷ்ட நஷ்டங்கள் எல்லாம் "அதிகம் வெற்றி வாய்ப்புள்ளவையாக"  இருக்க வேண்டும் இதை CALCULATED RISK என்பார்கள்.
நல்ல தொழிலதிபர்களின் வாழ்க்கை வரலாறு உங்கள் கைவசம் இருக்கட்டும். அவற்றை அடிக்கடி படியுங்கள் அவர்கள் படத்தை அறையில் மாட்டி வையுங்கள். அவர்கள் உங்களுக்கு முன்மாதிரியாக- மானசீக குருவாக - இருக்கட்டும்.
தொழிலில் 24 மணிநேரமும் கவனம் தேவை, கண்காணிப்பு இல்லாத தொழிலில் வீழ்ச்சியின் வித்து விதைக்கப்பட்டிருக்கிறது.
செய்யுந்தொழிலே தெய்வம் என்பதை நம்புங்கள். தொழிலை தெய்வமாக பாவியுங்கள். குளித்து முடித்து விட்டு எப்படி பக்தியோடு பூஜை செய்கிறோமோ அப்படி சில நெறிகளுடன் தொழில் செய்யுங்கள்.
என்ன நேர்ந்தாலும் நம் குடும்பத்தை காப்பாற்ற என்று ஒரு தேவைப்படும் தொகையை- சொத்தை -  சம்பாதிக்க துவங்கியதும் ஒதுக்கி வைத்து கொள்ள முயலுங்கள். சேமிப்பு அவசியம்.
கடன் வாங்குகிறீர்களோ இல்லையோ நல்ல வங்கிக்காரர்களுடன் நல்ல தொடர்புகள் வைத்து இருங்கள். உங்கள் நிறுவனத்தை சுற்றி காட்டுங்கள். உங்கள் சாதனைகளை அடிக்கடி தெரிவித்து கொண்டிருங்கள்.
             
            எங்கே பணம் புழங்குகிறதோ அங்கே செல்லுங்கள். (அந்த உற்சாகம், அந்த உணர்வு அந்த வாய்ப்பு உங்களையும் ஈர்த்து உதவும்)
           யார் பணம் பண்ணுகிறார்களோ அவர்களுடன் பழகுங்கள்.
          தொழில் செய்வதைப்பற்றியே எண்ணிக்கொண்டிருங்கள். அதே நினைவாக ஒவ்வொரு வாய்ப்பையும் கவனியுங்கள்.
வேறென்ன வேண்டும்
வெற்றி உங்களுக்குத்தான்
வாழ்த்துக்கள்!
                
           - டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எங்கே செல்கிறோம்?

நாம் பள்ளி சென்ற காலத்தில் அதிக அளவில் தொலைக்காட்சி காட்சிகள் கூட பார்த்தது இல்லை... வாரத்தில் வெள்ளிக்கிழமை ஒலியும் ஒளியும் மட்டும் தான் ஒர...