ஞாயிறு, 13 மே, 2018

தன்னம்பிக்கை, மன உறுதி.

உறுதி
_______

கொஞ்சம் கவலை படும்போது மனம் என்ன பாடு படுகிறது என்று பாருங்கள், எண்ணம் தானே அது நேர்மறையாக இருந்தால் என்ன?  நாம் இங்கே சுற்றிலும் காணும் பல சாதனையாளர்களும், நாம் பெரிதும் வியக்கும் கொண்டாடத்தக்க புகழ்பெற்றவர்களும், அதிக கஷ்டத்தை கடந்து தான் வந்திருக்கிறார்கள்.

எந்த சூழ்நிலையிலும் நமது உறுதி உடைபடாமல் இருக்க வேண்டும், ஏன் நாளுக்கு நாள் இன்னும் வலுவான மனஉறுதியை வளர்த்து கொள்ள வேண்டும்.

நமது முயற்சி வாழ்வின் வெற்றி நோக்கியே இருக்க வேண்டும். நல்லது நடக்கும் என்று நம்புவோம், நேர்மை, விடாமுயற்சி, மன உறுதியும் குறையாமல் தைரியமாக இருக்க வேண்டும்.

உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா என்று பாரதியார் அழைக்கின்றனர். மன உறுதியே உறுதியான வெற்றிக்கு வழி!

வி.சாந்தி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எங்கே செல்கிறோம்?

நாம் பள்ளி சென்ற காலத்தில் அதிக அளவில் தொலைக்காட்சி காட்சிகள் கூட பார்த்தது இல்லை... வாரத்தில் வெள்ளிக்கிழமை ஒலியும் ஒளியும் மட்டும் தான் ஒர...