தளர்ந்து விடாதே
வாழ்வெல்லாம் வருத்தம் என்று ஏன் கலங்குகிறாய்?
நீ கலங்குவதால் அது குறையும் என்று நினைக்கிறாயா?
உண்மையில் உன்னைக்கொண்டே
உன்னை வீழ்த்தவே இந்த கலக்கம் தோன்றுகிறது.,
பிரச்சினைகள் எல்லாம்
ஒருவகையில் உன்னை வளர்க்கிறது..
வானளாவிய மரங்களின் நிலைத்தன்மைக்கு காரணம் மறைந்திருக்கும் வேர்கள் அல்லவா...
நிலையான உனது வளர்ச்சிக்கு மனதில் மறைந்திருக்கும் நம்பிக்கை காரணமாகும்!
துணிந்து நில்
துன்பமற்ற வாழ்வை விட
துடிப்போடு போராடும் வாழ்வே
உனக்கும், உயிர் வளர்ச்சிக்கும் நல்லது!
வி.சாந்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக