ஞாயிறு, 13 மே, 2018

J.KRISHNAMURTI ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி பொன்மொழிகள்

எளிமையுடன் செவிமடுத்தல்

நீங்கள் எப்போதாவது மௌனமாக உட்கார்ந்திருக்கிறீர்களா? உங்கள் கவனத்தை குறிப்பிட்ட எதிலும் விடாப்பிடியாக செலுத்தாமல், ஒருமுகப்படுத்தும் முயற்சி எதுவும் செய்யாமல், மிகவும் இயல்பான அமைதியாக அமர்ந்திருக்கிறீர்களா?

இதுபோன்ற அமைதியில், உங்களால் எல்லாவற்றையும் கேட்கமுடியும் – வெகு தொலைவிலுள்ள சத்தத்தையும் கேட்க முடியும்,; அருகிலுள்ள சத்தத்தையும் உங்களால் கேட்கமுடியும்; இரண்டையும் ஒருசேரவும் கேட்க முடியும். அதாவது, நீங்கள் இயல்பான அமைதியில்,  எல்லாவற்றையும் கேட்கமுடியும், கவனிக்க முடியும். உங்கள் மனதின் கவனம், ஒரு சிறிய அலைவரிசையோடு மட்டும் ஒட்டிக்கொள்வதில்லை.

இதுபோல, எளிதாக, கடினமில்லாமல் நீங்கள், அனைத்தையும் கேட்கத்தொடங்கினால், உங்களின் உள்ளில் அசாதாரண மாற்றம் அடைவதை காண்பீர்கள்.

உங்களின் வில்-பவர் இல்லாமல் வந்த மாற்றம் அது. நீங்கள் அடைய நினைத்து வந்ததல்ல அது.

அத்தகைய மாற்றத்தில், பேரழகும், ஆழ்ந்த உள்புரிதலும் இருக்கும்.

J KRISHNAMURTI

The Book of life, January 1, Listen with ease

1 கருத்து:

எங்கே செல்கிறோம்?

நாம் பள்ளி சென்ற காலத்தில் அதிக அளவில் தொலைக்காட்சி காட்சிகள் கூட பார்த்தது இல்லை... வாரத்தில் வெள்ளிக்கிழமை ஒலியும் ஒளியும் மட்டும் தான் ஒர...